செம்பருத்தி டீயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது. செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகுவதால், காய்ச்சலை அதிகரிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.