Shipment Weight: 150 gm
விளையாட்டு என்பதற்குப் போட்டியிடுதல் என்பது பொருள். அன்றைய விளையாட்டுகளில் ஆரோக்கியமான போட்டியும், உடலுக்கு ஆரோக்கியமும் இருந்தன. ஆனால் இன்று விளையாட்டு என்பது கைப்பேசியுடனும் கணிப்பொறியுடனுமே. ஆரோக்கியம் என்பது அறவே இல்லை. இன்றைய தலைமுறையினரின் கைகளை அலைபேசி ஆக்கிரமித்துள்ளது. ஆனால் 90-களில் பிறந்த குழந்தைகளின் கையிலும் சட்டைப் பையிலும் பம்பரமும், கோலி குண்டுகளுமே இருந்தன. அன்றைய ஆரோக்கியமான விளையாட்டுகளால் உடல் செல்களில் உயிர் பிறந்தது. ஆனால் இன்றைய ஆடம்பர விளையாட்டுகளால் உடலில் உயிர் பிரிகிறது. பழமையைச் சற்றேப் புரட்டிப் பார்ப்போம். 90-களில் சற்று புரண்டு பார்ப்போம்.