இயல்பாகவே இனிமை என்பதற்கு உவமையாகத் தேனைக் குறிப்பிடுவர். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பதேன் வந்து பாயிது காதினிலே’ என்று தமிழின் இனிமைக்குத் தேனைக் குறிப்பிட்டார் பாரதியார். ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகார மதை’ என தமிழர்களின் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பெருமைக்குத் தேனை ஒப்பிட்டனர். ‘ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்’ என்பதற்கு உவவைத் தேன் கூடு ஆகும். இது இரும்புச் சத்தின் இருப்பிடம், நினைவாற்றலின் நிரூபணம், புரதத்தின் பிரதானம், வைட்டமின்களின் வற்றாத குளம், கருவுறுதலுக்கு கற்பக விருட்சம் எனத் தேனின் பயனும் நீண்டு கொண்டேச் செல்கிறது.