Shipment Weight: 1500 gm
தமிழர்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. அன்றைய தமிழர்கள் காலை எழுந்து வேப்பங்குச்சியில் பல் துலக்குவது முதல் இரவு பாயில் படுத்துறங்குவது வரை எல்லா செயல்பாடுகளையும் அறிவியல் அடிப்படையிலே அமைத்திருந்தனர். பாயில் படுத்துறங்குவதால் ஏற்படும் மருத்துவ பலனை மறக்கத்தான் முடியுமா? மறுக்கத்தான் முடியுமா? கோரைப் பாயானது இயற்கையிலே குளிர்ச்சித் தன்மை நிறைந்தது. இதனில் படுத்துறங்குவதால் உடல் சூடு தணியும். இரத்த ஒட்டம் சீராகும். உடல் வலி நீங்கும். தமிழகத்தில் புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்படும் சீர்வரிசையில் கோரைப் பாய் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் உழைப்பு, இரவு உறக்கம் என்ற உடலியல் சூத்திரத்தை மாற்றி, இன்று நவீனம் என்ற பெயரில் தூக்கத்தைத் தொலைத்து நிற்கிறோம். உடலுக்கும் மனதுக்கும் இன்றியமையாத தூக்கத்தை இன்றே பெறுவோம் வந்தவாசி பாயின் மூலம்.